put-1

. ஆதிகேசவன், ஆராய்ச்சி மற்றும் அறிஞர், குரு நானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா.

By D Adhikesavan, Research and Scholar University of Madras, Tamil Nadu, India.

The Mental Hospital

9/24/2017

The Mental Hospital




          We wish to express our sincere greetings to the good ones who have come to read this great article. Once again ensure that we all are very clear, including you. Because our historical traces remind to us that we all are crazy (Only a few people are crazy for hours) in a place for a few minutes. Humans cannot always calculate that they are the biggest phenomenon of bad things happening at these times. In these ways everyone born as a human being is based on. The rulers are too much to get in. Their crazy many days will continue.

                                                                                                                             Continue


மனநல மருத்துவமனை
        இந்த மிக அருமையான ஒரு கட்டுரையை வாசிக்க வந்த நல்ல உள்ளங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தங்கள் உட்பட நாம் அனைவரும் மிக தெளிவாக உள்ளோம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி கொள்ளவும். ஏனென்றால் நாம் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சில நிமிடங்களாவது (ஒரு சில பேர் மணிக்கணக்கில்) பைத்தியம்மாகத்தான் இருக்கின்றோம் என்று நம்முடைய வரலாற்று சுவடுகள் நினைவுபடுத்துகின்றன. இத்தருணங்களில் நடைபெறும் தப்பான செயல்களால் எவ்வளோ பெரிய விபரீதங்களாக இருக்கும் என்று மனிதர்களால் எப்போதும் கணக்கிட்டு சொல்ல முடியாது. இவ்வகைகளில் மனிதனாக பிறந்த அனைவரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதில் அதிகமாக மாட்டிக்கொள்வது ஆட்சியாளர்கள்தான். இவர்களுடைய பைத்தியம் நாள் கணக்கில் கூட தொடரும்.

                                                                                                                                                                       தொடரும்

9/19/2017

A month old baby and Ayilan Kurdi.



          Human beings, special humans, Geniuses, Kings, Intellectuals, king of intellectuals, Rulers, world leaders, world geniuses and who else are you in this world? Where are you all going? What are you all looking for? Why do you all close your eyes? God will not come, naturalness will not come, animals will not come; nothing will come to save us except us in the world. The natural habitats are beating (waiting) to destroying us from the root, the animals are destroying us, and Why should these geniuses be overtaken to destroy humans? How are these geniuses justified in any way to destroy humans? Do these geniuses know a fact? Human deaths occur by natural disaster 1, 05, 907 per year, loss of human life by animals (living species) attacks 1, 11,220 per year, By the mosquito 7, 25,000 per year, and only by humans terror alone 4, 75,000 per year. (Except accident, suicide and so on) 

                                      What to write? What to do? Pls call to solution: adhike@gmail.com

 ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் கைவிரித்த உச்சநீதிமன்றம்

ஒரு மாத குழந்தை மற்றும் அய்லான் குர்தி

          மனிதர்கள், மாமனிதர்கள், மஹான்கள், மன்னர்கள், அறிவரளிகள், அறிவு ஜீவிகள், ஆட்சியாளர்கள், உலக தலைவர்கள், உலக மஹான்கள் மற்றும் வேறு யாரவது இருக்கீர்களா இந்த உலகத்தில்? நீங்கள் அனைவரும் எங்கே போய்க்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் எதை தேடி போய்க்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் ஏன் உங்கள் கண்ணை மூடி இருக்கிறீர்கள்? கடவுள் வரமாட்டார், இயற்க்கை வராது, மிருகங்கள் வராது, நம்மை தவிர வேற எதுவும் வராது நம்மை காப்பாற்றா இந்த உலகத்தில். இயற்க்கைகள் நம்மை வேரோடு அழிக்க துடித்து கொண்டு இருக்கின்றன, மிருகங்கள் நம்மை அழித்துக்கொண்டு வருகின்றன, இவைகளில் ஏன் இந்த மஹாமனிதர்கள் முந்தி கொள்ள வேண்டும் மனிதர்களை அழிக்கஇந்த மஹாமனிதர்கள் மனிதனை கொள்வது எந்த விதத்தில் நியாயப்படுத்துகிறார்கள்? இவர்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஆண்டுதோறும் இயற்கையால் மனித உயிரிழப்புகள்  நிகழ்கிறது 1, 05, 907, விலங்குகளால் (உயிரினங்கள்) தாக்குதல்களால் 1, 11,220 உயிரிழப்புகள்,  கொசு மூலம் 7, 25,000 உயிரிழப்புகள், மனித பயங்கரவாத்தால் மட்டுமே 4, 75,000  உயிரிழப்புகள். (விபத்துகள், தற்கொலைகள் மற்றும் பல தவித்து)


                                                                                                          என்ன எழுதுவது? என்ன செய்வது?

9/15/2017

The Public people and the government


தமிழில் படிக்க கீழே வரவும்

        Who are the public people? Humans (we) are all public people, that is, common people. There is no alternative opinion on this. We all need to first understand this. In this understanding the government appears. Whoever does not know the meaning of the word "public people", he makes a word of government. So if we want to understand the meaning of the word "public people", before that we need to know the meaning of the word the government. Because they did not understand the meaning of the word "public people", they would make a word of government. [A word of the government for those who do not understand the meaning of the word "public people"]

The government
      Today human’s government is several types (names). For example: the monarchy, democracy, and the president's rule, it's going to be. That is, unless we do not understand the public people, similarly we can bring 1000 governments in this world.


The Government history
      The historians say that humans lived in first place at the Lemuria continent in the world and they say that humans have spread all over the world form here. The government has been gradually growing up until the very first day of the day. That is the first man who lived separate alone later he began joined together to live like a paired, for the family, group and in a place. So the government was created to solve problems arising when man lived together. Here the government is not alone; he is one of the common people. Then the name of the government is not in any other form. The government at this time was a very pure government because the name is a common people (government). Today, in this world every kind of government starts from this government. After a long time the kings came to the public but not the public people. Following this, the government came for the people, but it came not as king like the public people.


         Generally various type of government in this world that is important 1. Democracy [Direct and Indirect Democracy, (Switzerland, India)] 2. Presidential republic (America), Monarchy (UK), 4. Communism (Russian), 5. Military Dictatorship (Myanmar and Pakistan), 6. Dictatorship (Idi Amin-Uganda, Ferdinand Marcos-Philippine, Adobe Hitler-Germany), 7. Autocracy (king or individual). All this government is for the public people and like the public people. It was what the rule of the king was, or what was the rule of the people, or what was the dictatorial rule. Everything is the rule of the public people. Everyone is public people. So everyone will make faults in this world life.

     These are just a few of their actions to distinguish these rulers from the public people. Only these actions are one of the most important of the rulers. The law defines their actions. These acts can be done in accordance with the law. We cannot deny them that these all are public people, even if they do the legitimate actions. Whoever says (thinks) that i am not a public people, I am a king, I am a president, I am a prime minister, and I am a chief minister it means that he is in ignorance. More faults will definitely behave by in ignorant person. What does ignorance mean here? Let's see this later in detail.

   They would say (think) that i am a king, the president, the prime minister, the chief minister and if they are in ignorance, it's not a normal. This is very dangerous. What do you think this risk is?  Let's see these later in detail. Who think that we all are public people they should well aware their actions. Here we will see some of the faults that make them ignorant.


       When a king thinks that i am the king of this country, he can call others in any way but he will easily divide people into the public people. At that time, all of the assets of this country are public property, and I am the king of this country so he makes it easy to convert these assets into our property. Similarly, he will change the law like suitable to them, and then he will bring a law to the people (to control people). The current laws are the greater that the laws controlling the public people. How do we believe that these are the faults that the king is ignorant of? [If the king is intelligent (as king), why are the faults going to happen?]  We are going to see later what the ignorance of these kings is. Well, if there is any solution for this, then all his assets must be converted into public property after the king's death because; they are the public property that was captured by king’s ignorance. There is another reason for this, i.e. private property. Because there are a lot of difference between the private property and the king's property. Let's see this later in details. 


      I knew so far, only the king maker Kamarajar of the rulers conducted the public people regime. M. G. Ramachandran (MGR) held the rule only for the public people. There may also be Fidel Castro, Vladimir Lenin and Yasser Arafat in this world.  (Kamarajar and MGR ware fantastic honorable Chief Minister of Tamil Nadu)

Continue

Image result for kamarajar photo

பொது மக்களும் அரசாங்கமும்
  
          பொது மக்கள் என்பவர்கள் யார்? மனிதர்கள் (நாம்) அனைவரும் பொது மக்கள்தான், அதாவது பொதுவான மக்கள். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. இதை நாம் அனைவரும் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலில்தான் அரசாங்கமே தோன்றுகிறது. அதாவது எவர் ஒருவர் இந்த "பொது மக்கள்" என்ற வார்த்தையின் பொருளை அறியவில்லையோ அவர்தான் அரசாங்கம் என்ற ஒரு வார்த்தையை உண்டுபண்ணுகிறார்.  எனவே "பொது மக்கள்" என்ற வார்த்தையின் பொருளை புரிந்து கொள்ளா வேண்டுமென்றால் அதற்க்கு முன்னாடி அரசாங்கம் என்ற வார்த்தையின் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். ஏன்னென்றால் "பொது மக்கள்" என்ற வார்த்தையின் பொருளை புரிந்து கொள்ளாமல்தான் அரசாங்கம் என்ற ஒரு வார்த்தையை உண்டுபண்ணார்கள். ["பொது மக்கள்" என்ற வார்த்தையின் பொருளை புரிந்து கொள்ளாதவர்களுக்காக அரசாங்கம் என்ற ஒரு வார்த்தையை உற்பத்தி செய்யப்பட்டது]   

அரசாங்கம்
          தற்போதுள்ள மனிதர்களின் அரசாங்கம் பல வகைகள் (பெயர்கள்) உண்டு. எடுத்துக்காட்டாக: மன்னராட்சி, மக்களாட்சி, மற்றும் ஜனாதிபதி ஆட்சி.  இப்படி அது போய்க்கொண்டே இருக்கும். அதாவது பொது மக்கள் என்பதை புரிந்து கொள்ளாத வரையில் இதேபோல் நம்மால் 1000 அரசாங்கத்தை கொண்டு வர முடியும் இந்த உலகத்தில்.


அரசங்கதின் வரலாறு 
       முதன் முதலில் மனிதர்கள் வாழ்ந்த இடம் லெமூரியா கண்டம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். மேலும் ங்கிருந்துதான் உலக முழுவதும் பரவினார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அக்காலகட்டத்தின் முதல் இந்நாள் வரை அரசாங்கம் என்பது படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது.  அதாவது முதலில் தனி தனியாக வாழ்ந்த மனிதன் பிறகு ஜோடியாக, குடும்பமாக, குழுவாக, மற்றும் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ ஆரம்பித்தான். எனவே மனிதன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த போது ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் அரசாங்கம். இங்கே அரசாங்கம் என்பது தனியாக ஒன்று இல்லை அதாவது பொதுவான மனிதர்களில் அவரும் ஒருவர். அப்போது அரசாங்கம் என்ற பெயர் வேறு எந்த ரூபத்திலும் இல்லை. இக்காலகட்டத்தில் இருந்த அரசாங்கம் மிகவும் சுத்தமான அரசாங்கம் ஏனென்றால் அதற்க்கு பெயர் பொது மக்கள் (அரசாங்கம்).  தற்போது இந்த உலகத்தில் உள்ள எல்லா வகையான அரசாங்கமும் இந்த அரசாங்கத்திடமிருந்துதான் தொடங்குக்குகிறது. பல காலத்திற்கு பிறகு மன்னர்கள் வந்தார்கள் பொது மக்களுக்காக ஆனால் பொது மக்களாக அல்ல. இதனை தொடர்ந்து அரசாங்கம் வந்தது மக்களுக்காக ஆனால் இது மன்னர்கள் போல் அல்லாமல் பொது மக்களை போல் வந்தது.


       பொதுவாக இந்த உலகத்தில் பலவகையான அரசாங்கம் இருக்கிறது அவைகளில் முக்கியமானது  1. ஜனநாயகம் [நேரடி மற்றும் மறைமுக ஜனநாயகம், (சுவிட்சர்லாந்து,இந்திய)], 2. குடியரசு தலைவர் ஆட்சி (ஜனநாயகம்) (அமெரிக்கா), 3. முடியாட்சி (இங்கிலாந்து), 4. கம்யூனிசம் (ரஷ்சிய) 5. ராணுவ சர்வாதிகாரம் (மியான்மர் மற்றும் பாக்கிஸ்தான்), 6. சர்வாதிகாரம் (இடியாமின்-உகாண்டா, பெர்டினாட் மார்கோஸ்-பிலிபைனான்ஸ், அடோப் ஹிட்லர்-ஜெர்மனி), 7. எதோச்சதிகாரம் (மன்னர் அல்லது தனி நபர்), ஆகியவையாகும். இந்த அரசாங்கம் அனைத்தும் பொது மக்களுக்காக, பொது மக்களை போல் உள்ள அரசாங்கம். அது மன்னர் ஆட்சியை இருந்த என்ன அல்லது மக்கள் ஆட்சியா இருந்த என்ன அல்லது சர்வாதிகார ஆட்சியை இருந்த என்ன. எல்லாமே பொது மக்கள் ஆட்சிதான். அனைவரும் பொது மக்கள்தான். எனவே அனைவரும் தவறுகளை செய்வார்கள் இந்த உலக வாழ்க்கையில்.

         பொது மக்களிடமிருந்து இந்த ஆட்சியாளர்களை வேறுபடுத்தி காட்டுவது இவர்களுடைய ஒரு சில செயல்கள்தான். இந்த செயல்கள்தான் ஆட்சியாளர்களிடம் உள்ள மிக முக்கியமான ஒன்று. இவர்களுடைய செயல்களைத்தான் சட்டம் வரையறை செய்கிறது. சட்டத்தில் உள்ளபடிதான் இவர்கள் செயல்களை செய்யமுடியும். இவர்கள் சட்டப்படி செயல்களை செய்தாலும் இவர்கள் அனைவரும் பொது மக்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. நான் பொது மக்கள் அல்ல, நான் ஒரு மன்னன், நான் ஒரு ஜனாதிபதி, நான் ஒரு பிரதமர், நான் ஒரு முதலமைச்சர், என்று எவர் ஒருவர் கூறுகிறாரே (நினைக்கிறாரோ) அவர் அறியாமையில் இருக்கிறார் என்று அர்த்தம். அறியாமையில் உள்ளவர்களால் கண்டிப்பாக தப்புகள் நடக்கும். இங்கே அறியாமை என்பது எதை குறிக்கிறது? இதை பிறகு விரிவாக பார்க்கலாம்.

         நான் ஒரு மன்னன், ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என்று  கூறும் (நினைக்கும்) இவர்கள், அறியாமையில் இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல. இது மிகவும் அபாயகரமானது. இந்த அபாயம் என்பது எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இவைகளையும்  பிறகு விரிவாக பார்க்கலாம். நாம் அனைவரும் பொது மக்கள் என்று நினைப்பவர்கள் இவர்களை நன்கு கண்காணிக்க வேண்டும். இங்கே இவர்கள் அறியாமையால் செய்யும் தப்புகளை ஒரு சிலவற்றை பார்ப்போம்.


              ஒரு மன்னன், நான் இந்நாட்டின் மன்னன் என்று நினைக்கும் போது, அவர் மற்றவர்களை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம் ஆனால் அவர் மக்களை பொது மக்கள் என்று பிரித்துவிடுவார். அப்போது இந்நாட்டினுடைய சொத்துக்கள் அனைத்தும் பொதுமக்கள் சொத்து, நான் இந்நாட்டின் மன்னன் எனவே இந்த சொத்துக்களை நமது சொத்தாக மாற்ற வேண்டும் என்று அவர் சுலபமாக மாற்றி விடுவார். இதேபோல் சட்டத்தையும் அவருக்கு தகுந்தாப்போல் மாற்றி விடுவார். பிறகு போது மக்களுக்கென்று (மக்களை கட்டுப்படுத்த) ஒரு சட்டத்தையும் கொண்டுவந்துவிடுவார். தற்போது உள்ள சட்டங்கள் அதிகமாக இருப்பது பொது மக்களை கட்டுபடுத்தும் சட்டங்கள்தான். இவைகள் எல்லாம் மன்னன் அறியாமை செய்யும் தப்புக்கள் என்று நாம் எப்படி நம்புவது? [மன்னன் அறிவாளியாக (மன்னனாக) இருந்தால் தப்புக்கள் ஏன் நடக்கப்போகிறது?] இந்த மன்னர்களுடைய அறியாமை என்ன என்பதைத்தான் பிறகு பார்க்க போகிறோம். சரி இதற்க்கு ஏதாவது தீர்வு இருக்க என்றல் இருக்கு  மன்னன் இறந்துவிட்ட பிறகு அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பொது சொத்துக்களாக மாற்றப்பட வேண்டும். ஏன்னென்றால் மன்னரின் அறியாமையால் கைப்பற்றப்பட்ட பொது சொத்துக்கள் தானே அவைகள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு அதாவது தனியார் சொத்துக்கள். ஏன்னென்றால் தனியார் சொத்துக்கும் மன்னரின் சொத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன.  இதையும் பிறகு விலாவரியாக பார்க்கலாம்

         எனக்கு இதுவரை தெரிந்த ஆட்சியாளர்களில் கர்ம வீரர் காமராஜர் மட்டுமே பொது மக்கள் ஆட்சியை நடத்தினார். எம் ஜி ராமசந்திரன் (எம்ஜிஆர்) (MGR) பொதுமக்களுக்காகவே ஆட்சியை நடத்தினார். மேலும் இந்த உலகத்தில் பிடல் காஸ்ட்ரோ, விளாடிமிர் லெனின் மற்றும் யாசர் அராபத் ஆகியோர் இருக்கலாம்.   

                                                                            தொடரும்

Image result for MGR political photo


9/02/2017

India, NEET Exam and Doctor Anitha



                                                                தமிழில் படிக்க கீழே வரவும்
                                                         Doctor S Anitha

         I am a D Adhikesvan. I have a few doubts about the selection of this NEET competition exam because I am a Tamil. Mainly my purpose, goal, everything is that this poverty, unemployment, and extremism (terrorism) must be taken out of this world. So if we want to take this three out of this world, my desire is that everything should be right because my opinion is that everything in this world can be right but that is true of this world.

       If someone wants to help someone, the help he asks depends. Help is knowledge (advice), guidance, labor and material. There is no restriction to give to others. Here are four categories: a helper-doer, a helper-asker, a helper-asker-goods and an owner of the property.

        For instance, a Gujarati student asks the Prime Minister of India to help me study medicine in Tamil Nadu. This is not a problem for him. But it's a bit harder to do help that many students from many states are asking. Because the Prime Minister of eminent India should look equally at all students in India. He is the eminent Prime Minister of India. So it's a difficult thing for a special Prime Minister. That will be right what will he do in this situation? What should he do?

        Now the eminent Prime Minister of India has to get an approval from the Honorable Chief Minister of Tamil Nadu to study medicine in Tamil Nadu. What is that endorsement is well known to the eminent Prime Minister of India and the Honorable Chief Minister of Tamil Nadu. No matter how many students are and the problem is gone. If there create a problem with the Tamil people in this situation, it is the duty of the Honorable Chief Minister of Tamil Nadu to deal with it. But everything in this NEET exam is inverted and a different way. As a result, a student is dead in Tamil Nadu.


      What should Tamil students do to study medicine in Tamil Nadu? In which language should they study? Which state should they study in? In what school do they need to study? Why should they write a NEET exam? Who will give the command to write a NEET exam? Why does not NEET exam prepare in Tamil? Let's go through these questions.

-         Growing
    anitha girl photos க்கான பட முடிவு


International politics after the NEET exam The Delhi professor, who clearly explains, is Miyaz Ahmed. In Tamil, Anantha Vikatan, Publised on 23.05.2017

"Why are you being an academic and why are you opposed to the selection of choice? ... Do not you want us to improve our education sector?"

"I am an academic, professor, because I am opposed to the NEET exam. The quality of education will improve by the selection process. In fact, the selection of the NEET is against the Indian Constitution. "

'' How are you saying ...? ''

"Every passage of the Constitution prescribes social justice and equality. But this choice is contrary to that. India is not a single nation. It is a collection of states of various nationalities. A single choice to examine the potential of students of various nationalities is pure disorientation. The North East student and all the chances of the Delhi student who will not compete in the competition will also compete. Is not the only choice for both of them to work with people? Not only that, the Indian governments are doing the job of fulfilling a new academic policy in the House, but each of them is fulfilling its own. This is a part of that.

"Well ... if you still have the same old policy, do you want to go on a new academic policy?"

'' Surely have to change. It should be for the benefit of our students, not for the benefit of the companies. But now big companies are designing our policy. Its representatives include the World Bank, the International Monetary Fund and the World Trade Organization. With the benefit of the students, the interests of the employers are of primary importance in this policy. World capital has launched a war on the Indian education department. That capital will not be loyal to any nation, people or natural resources. It is only the profit of the profit, the child of that capital is the 'choice'. "

'' I do not understand. What is the World Trade Organization and what is the global capital? "

"The Indian government has made some promises to the World Trade Organization. One of these is the privatization of the entire Indian health department. Allowing foreign funding without a settlement. If this is to be fulfilled, the Indian public health department should be distorted. This is the choice to disturb it. "

"Can you explain a little more ...?"

Students in the field of medical education should work for some time in the village. There is a reservation. But there is no chance of selection in the NEET. Thus, the village and primary health centers will be destroyed. There will be private hospitals in that place. You need to understand this background not only in terms of the selection option. If you see this nut selection in the context of social justice rather than international politics, you know the politics of the people who are deprived of the opportunity to take care not to come in the medical field. "

'Are eligible to come in the field of medicine?'

What is the status quo? If a student from subordinate and tribal communities is studying hard and waiting for a good medical course, you have a choice of a nut. Just think of it. Can he pay for the specialty classes? But you say, 'run for one run,' a tribal student who cannot afford to pay special classes and cannot afford money. Think from the heart, not from the brain. Has all the districts in your state got all the facilities? When I was talking here ... 'Villupuram and Ramanathapuram districts  are behind.' So how can children in those districts compete with the children of the Chennai district? When there is so much trouble in a state, will a single country have a different nationality, religion, caste and discrimination?

"But Tamil Nadu is the only one that strongly opposes NEET's selection?"

'' Yes. You have to be proud of it. This is the Ayodhidas Pandit and the Periyar you have the wisdom. It is clear that you are social justice than other states. That's why, if you have any small friction, you are uprooting ... fighting. In fact, the struggles of the Tamil people are for other ethnic groups in India. When other states are unable to hold Jallikattu, you have successfully conducted a struggle and conducted a jalikotai. Now you have to hold the jalcut against the NEET exam. "

                                       

டாக்டர் அனிதா

           த. ஆதிகேசவன் என்றவனாகிய நான், தமிழன் என்பதால் எனக்கும் இந்த நீட் போட்டி தேர்வு பற்றி ஒரு சில சந்தேகங்கள் இருக்கு. முக்கியமா என்னுடைய நோக்கம், இலக்கு, எல்லாமே வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், மற்றும் தீவிரவாதத்தை இந்த உலகத்திலிருந்து வேரோடு எடுக்க வேண்டும் என்பததுதான். எனவே நாம் இந்த உலகத்திலிருந்து இந்த மூன்றையும் வேரோடு எடுக்க வேண்டுமென்றால் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் ஏன்னென்றால் இந்த உலகத்தில் உள்ள எல்லாமே சரியாக இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து ஆனால் இந்த உலகத்தை பொறுத்தவரை உண்மையே அதுதான்.  

           ஒருவர் இன்னொருத்தவருக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் அவர் கேட்க்கும் உதவி பொறுத்து இருக்கு. உதவி என்பதுஅறிவு (புத்திமதி), வழி காட்டுதல், உழைப்பு,    மற்றும் பொருள் ஆகியவை ஆகும். நம்முடையதை மற்றவருக்கு கொடுக்க எந்த தடையும் இல்லை. இங்கே உதவி கேட்பவர், உதவி செய்பவர், உதவி கேட்கும் பொருள் மற்றும் அப்பொருளின் உரிமையாளர் என நான்கு வகைகளாக இருக்கின்றன.   

             உதாரணமாக, ஒரு குஜராத் மாணவர் மாண்புமிகு இந்திய பிரதம மந்திரியிடம் தமிழ் நாட்டில் மருத்துவம் படிக்கச் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார். இது ஒரு பிரச்சினையே கிடையாது அவருக்கு. ஆனால் அதுவே பல மாநிலத்திலிருந்து பல மாணவர்கள் கேட்கிறார்கள் என்றல் கொஞ்சம் சிரமமான விஷயம்தான் அவருக்கு. ஏனென்றால் ஒரு சிறப்புமிக்க இந்தியாவின் - பிரதம மந்திரி இந்தியாவில் உள்ள அனைத்து மாணவ செல்வங்களையும் சமமாக பார்க்க வேண்டும். அவர்தான் இந்தியாவின் சிறப்புமிக்க பிரதம மந்திரி ஆவர். எனவே இந்தியாவின் ஒரு சிறப்புமிக்க பிரதம மந்திரிக்கு சற்று சிரமமான விஷயம்தான் அது. இந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்தல் அது சரியாக இருக்கும்? என்ன செய்ய வேண்டும்?        

             இப்பொழுது தமிழ் நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு இந்தியாவின் சிறப்புமிக்க பிரதம மந்திரி ஒரு ஒப்புதல் பெறவேண்டும் மாண்புமிகு தமிழக முதல்வரிடம். அந்த ஒப்புதல் என்ன என்பது இந்தியாவின் சிறப்புமிக்க பிரதம மந்திரிக்கும் மற்றும் தமிழக மாண்புமிகு முதல்வருக்கும் நன்றாகவே தெரியும். எத்தனை மாணவ செல்வங்களாக இருந்தாலும் பரவாயில்லை பிரச்சனை ஒழிந்தது. இந்த சூழ் நிலையில் தமிழக மக்களிடம் பிரச்சனை தோன்றினால் அதை சமாளிப்பது தமிழக மாண்புமிகு முதவருடைய கடமையாகும். ஆனால் இந்த நீட் தேர்வில் எல்லாமே வேறுமாதிரிய தலைகீழா இருக்கு. அதன்காரணத்தினால் தமிழகத்தின் ஒரு மாணவி இறந்துபோனதுதான் மிச்சம்.

         தமிழ் நாட்டு மாணவ செல்வங்கள் தமிழ் நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எந்த மொழியில் படிக்க வேண்டும்? எந்த மாநிலத்தில் படிக்க வேண்டும்எந்த பள்ளியில் படிக்க வேண்டும்? நீட் என்ற பொது தேர்வை ஏன் எழுத வேண்டும்? நீட் பொது தேர்வை எழுத யார் கட்டளை இட வேண்டும்? ஏன் நீட் தேர்வு தமிழில் இல்லை? இப்படி கேள்விகளை அடிக்கி கொண்டே போகலாம். 

                                           -      வளரும்

  நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் - மு.நியாஸ் அகமது.  அனந்த விகடன் 23.05.2017

''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''

''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''

''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''

'சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''

''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் நீட்' தேர்வு.''

''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''

''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''

'தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''

''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''

''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''

''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''


தொடர்புடைய படம்