தமிழில் படிக்க கீழே வரவும்
Dear
Friends and Researchers
The main reason to start this
blog is that we all need to unite. Who needs to unite? Whoever reaches the
poverty, unemployment and extremism of this world, they all must unite. All of
them can exchange their concepts here. And we all together need to explain well
people and the government to understand how to get rid of them. We must
convince people and the government that these can be destroyed from the world. After
that, the people and the government will get together to destroy them. At that
time, no man ever needs to suffer for the food. Really, as far as the world is
concerned, humans are not necessary to eat and to live hard. It is true that humans
have suffered only through human legal frameworks and ways of living in this world.
If we go through any of the ways, how
can we destroy these roots? This is the most important question here. As for
me, my proposal is strongly decision that can be destroyed by commercial system
from the world. Generally, Naturally 40% of poverty, unemployment and terrorism
will eventually get rid of the world. This is an absolutely true. And with some
good humans’ help, 20% will eliminate poverty, unemployment and terrorism from
the world. So 60% of poverty, unemployment and terrorism will simply get rid of
the world. We are bringing the government to end other 40% of the poverty,
unemployment and extremism. But the government of mankind will abolish 30
percent in 40 percent. At the same time, the humans’ government will produce 10
percent from 60 percent. A total of 20 (10 + 10) percentage of poverty,
unemployment and terrorism continue to remain in the world. But we are pleased
to announce that this blog has begun to completely remove this 20 percent. That
is 100% to achievement.
There are many ways to destroy
these roots from the world. But we use only a few of these methods, because we
do not know that this world offers us many ways. Importantly we use this system
of administration, science and commerce. In the course of my research, in these
methods, I do not have any alternative idea that Commercial system is a much
better method than any other method of removal from this world. This commerce
system can be used in three ways to remove them completely. They are a personal
commerce system, government commerce and non-government commerce system. This
is the best method of government commerce system to remove them completely.
It should be said that it is
not difficult for us to eradicate them. Currently we are using a personal
commerce system. How many people do we know this method is a very dangerous method?
In fact, in this world system, the individual commercial system is a very
dangerous method. It must be understood very clear from the rulers until the UN
Council. Furthermore, it must be understood well from the public people until
the charities. So we are very clear that we are not going to discuss the current
individual commercial system.
All the best
அறிமுகம்
அன்புள்ள நண்பர்கள் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள்
இந்த வலைப்பதிவு
ஆரம்பிக்க முக்கிய காரணம் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்குத்தான். யார் ஒன்றுபட வேண்டும்? இந்த உலகத்தில்
வறுமை, வேலையில்லா தில்லாட்டம் மற்றும் தீவிரவாதம் இவைகளை பற்றி யாரெல்லாம் ஆராட்சி
செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். அவர்கள் அனைவரும்
இங்கே அவர்களுடைய கருத்துக்களை பரமாறிக்கொள்ளலாம். மேலும் நாம்
அனைவரும் ஒன்று சேர்ந்து இவைகளை எப்படி வேரோடு அழிக்க முடியும் என்பதை
மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்கு புரியும்படி எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவைகளை உலகத்திலிருந்து வேரோடு அழிக்க முடியும் என்று மக்களுக்களையும்
அரசாங்கத்தையும் நாம் நம்பவைக்க வேண்டும். அதன் பிறகு மக்களும் அரசாங்கமும் ஒன்று சேர்ந்து இவைகளை வேரோடு அழித்து
விடுவார்கள். அப்போது எந்த ஒரு மனிதனும் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட வேண்டியதா இருக்காது. உண்மையிலே, இந்த உலகத்தை பொறுத்தவரை மனிதர்கள்
கஷ்டப்பட்டுதான் சாப்பிட வேண்டும், கஷ்டப்பட்டுதான் வாழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதேபோல், இந்த உலகத்தில் மனிதர்களுடைய சட்ட திட்டங்களாலும் மற்றும்
வழி முறைகளாலும்தான் மனிதர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.
நாம் எந்த வழி முறைகளில் சென்றால் இவைகளை வேரோடு அழிக்க முடியும்? இதுதான் இங்கே உள்ள மிக முக்கியமான கேள்வி. என்னை பொறுத்தவரை
வணிகத்தின் வழி முறையால் இவைகளை இந்த உலகத்திலிருந்து வேரோடு அழிக்க முடியும்
என்பது எனது திட்ட வட்டமான முடிவு. பொதுவாக இயற்கையாகவே 40% வறுமை, வேலையில்லா தில்லாட்டம் மற்றும் தீவிரவாதம் இந்த உலகத்திலிருந்து ஒழிந்து விடும். இது
முற்றிலும் ஓர் உண்மை. மேலும் சில நல்ல மனிதர்களின் உதவிகள் மூலம் 20% வறுமை, வேலையில்லா தில்லாட்டம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிந்து விடும். எனவே 60% வறுமை, வேலையில்லா தில்லாட்டம் மற்றும் தீவிரவாதம் இந்த உலகத்திலிருந்து சர்வ
சாதாரணமாக ஒழிந்து விடும். மீதம் உள்ள 40% வறுமை, வேலையில்லாதில்லாட்டம்
மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்கத்தான் நாம் அரசாங்கத்தை கொண்டு வருகிறோம். ஆனால்
மனிதர்களுடைய அரசாங்கம் 40 சதவிகிதத்தில் 30 சதவிதம் ஒழிக்கும். அதே நேரத்தில் மனிதர்களுடைய அரசாங்கம் வளர்ந்துள்ள 60 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிதம் உற்பத்தி செய்யும். ஆக
மொத்தம் 20 (10+10) சதவிதம் வறுமை, வேலையில்லாதில்லாட்டம் மற்றும் தீவிரவாதம் உலகில்
தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த 20 சதவிகிதத்தை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதற்காத்தான் இந்த வலைப்பதிவு
தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இவைகளை இந்த உலகத்திலிருந்து வேரோடு அழிக்க பல வழி முறைகள் உள்ளன. ஆனால் அவைகளில் ஒரு சில வழி முறைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம், ஏனென்றால் இந்த உலகம் நமக்கு பல வழிகளை வழங்கி இருக்கிறது
என்பது நமக்கு தெரியாது. முக்கியமாக நாம் இந்த உலகில் நிர்வாக முறை, அறிவியல் முறை மற்றும் வணிக முறைகளை பயன்படுத்துகிறோம். இந்த முறைகளில் என்னுடைய ஆராய்ச்சி முடிவின்ப்படி,
இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அகற்றுவதற்கு மற்ற முறைகளை
விட வணிக முறை ஒரு மிக சிறந்த முறையாகும் என்பது எனக்கு மாற்று கருத்து இல்லை.
மேலும் இந்த வணிக முறையை மூன்று வழிகளில் பயன் படுத்தலாம் இவைகளை முற்றிலுமாக
அகற்றுவதற்கு. அவைகள் தனி நபர் வணிக முறை,
அரசு வணிக முறை மற்றும் அரசு சாரா வணிக முறையாகும். இந்த வழி முறைகளில் அரசு வணிக முறை ஒரு சிறந்த முறையாகும்.
இவைகளை ஒழிப்பது நமக்கு கடினமாக இருக்கும் என்றல் இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும். தற்போது நாம் பயன் படுத்திக்கொண்டு இருப்பது தனி நபர் வணிக முறையாகும். இந்த முறை மிகவும் அபாயகரமான முறை என்பது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்? உண்மையில் இந்த உலக முறைகளில் தனி நபர் வணிக முறை என்பது மிகவும் அபாயகரமான
முறையாகும். இதை ஆட்சியாளர்கள் முதல் ஐநா சபை வரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பொது
மக்கள் முதல் தொண்டு செய்பவர்கள் வரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே தற்போதைக்கு தனி நபர் வணிக முறையை பற்றி விவாதிக்க போவதில்லை என்பதை மிக
தெளிவாக சொல்லி விடுகின்றோம்.
வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.