தமிழில் படிக்க கீழே வரவும்
Who are the public people? Humans (we)
are all public people, that is, common people. There is no alternative opinion
on this. We all need to first understand this. In this understanding the
government appears. Whoever does not know the meaning of the word "public
people", he makes a word of government. So if we want to understand the
meaning of the word "public people", before that we need to know the
meaning of the word the government. Because they did not understand the meaning
of the word "public people", they would make a word of government. [A
word of the government for those who do not understand the meaning of the word
"public people"]
The
government
Today human’s government is several types
(names). For example: the monarchy, democracy, and the president's rule, it's
going to be. That is, unless we do not understand the public people, similarly we
can bring 1000 governments in this world.
The
Government history
The historians say that humans lived in
first place at the Lemuria continent in the world and they say that humans have
spread all over the world form here. The government has been gradually growing up until
the very first day of the day. That is the first man who lived separate alone later
he began joined together to live like a paired, for the family, group and in a place.
So the government was created to solve problems arising when man lived together.
Here the government is not alone; he is one of the common people. Then the name
of the government is not in any other form. The government at this time was a
very pure government because the name is a common people (government). Today, in
this world every kind of government starts from this government. After a long
time the kings came to the public but not the public people. Following this,
the government came for the people, but it came not as king like the public
people.
Generally
various type of government in this world that is important 1. Democracy [Direct
and Indirect Democracy, (Switzerland, India)] 2. Presidential republic (America),
Monarchy (UK), 4. Communism (Russian), 5. Military Dictatorship (Myanmar and
Pakistan), 6. Dictatorship (Idi Amin-Uganda, Ferdinand Marcos-Philippine, Adobe
Hitler-Germany), 7. Autocracy (king or individual). All this government is for
the public people and like the public people. It was what the rule of the king
was, or what was the rule of the people, or what was the dictatorial rule. Everything
is the rule of the public people. Everyone is public people. So everyone will
make faults in this world life.
These
are just a few of their actions to distinguish these rulers from the public people.
Only these actions are one of the most important of the rulers. The law defines
their actions. These acts can be done in accordance with the law. We cannot
deny them that these all are public people, even if they do the legitimate
actions. Whoever says (thinks) that i am not a public people, I am a king, I am
a president, I am a prime minister, and I am a chief minister it means that he
is in ignorance. More faults will definitely behave by in ignorant person. What
does ignorance mean here? Let's see this later in detail.
They would say (think) that i am a king, the
president, the prime minister, the chief minister and if they are in ignorance,
it's not a normal. This is very dangerous. What do you think this risk is? Let's see these later in detail. Who think
that we all are public people they should well aware their actions. Here we
will see some of the faults that make them ignorant.
When a king
thinks that i am the king of this country, he can call others in any way but he
will easily divide people into the public people. At that time, all of the
assets of this country are public property, and I am the king of this country so
he makes it easy to convert these assets into our property. Similarly, he will
change the law like suitable to them, and then he will bring a law to the
people (to control people). The current laws are the greater that the laws controlling
the public people. How do we believe that these are the faults that the king is
ignorant of? [If the king is intelligent (as king), why are the faults going to
happen?] We are going to see later what the
ignorance of these kings is. Well, if there is any solution for this, then all
his assets must be converted into public property after the king's death because;
they are the public property that was captured by king’s ignorance. There is
another reason for this, i.e. private property. Because there are a lot of
difference between the private property and the king's property. Let's see this
later in details.
I
knew so far, only the king maker Kamarajar of the rulers conducted the public
people regime. M. G. Ramachandran (MGR) held the rule only for the public people.
There may also be Fidel Castro, Vladimir Lenin and Yasser Arafat in this world.
(Kamarajar and MGR ware fantastic honorable
Chief Minister of Tamil Nadu)
Continue
பொது மக்களும் அரசாங்கமும்
பொது மக்கள் என்பவர்கள் யார்? மனிதர்கள் (நாம்)
அனைவரும் பொது மக்கள்தான்,
அதாவது பொதுவான மக்கள். இதில் எந்தவித மாற்று கருத்தும்
இல்லை. இதை நாம் அனைவரும் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலில்தான் அரசாங்கமே தோன்றுகிறது. அதாவது எவர் ஒருவர் இந்த
"பொது மக்கள்" என்ற வார்த்தையின் பொருளை அறியவில்லையோ அவர்தான்
அரசாங்கம் என்ற ஒரு வார்த்தையை உண்டுபண்ணுகிறார். எனவே "பொது மக்கள்" என்ற வார்த்தையின் பொருளை புரிந்து கொள்ளா
வேண்டுமென்றால் அதற்க்கு முன்னாடி அரசாங்கம் என்ற வார்த்தையின் பொருளை அறிந்து
கொள்ள வேண்டும். ஏன்னென்றால் "பொது மக்கள்" என்ற வார்த்தையின் பொருளை
புரிந்து கொள்ளாமல்தான் அரசாங்கம் என்ற ஒரு வார்த்தையை உண்டுபண்ணார்கள். ["பொது மக்கள்"
என்ற வார்த்தையின் பொருளை புரிந்து கொள்ளாதவர்களுக்காக அரசாங்கம் என்ற ஒரு வார்த்தையை
உற்பத்தி செய்யப்பட்டது]
அரசாங்கம்
தற்போதுள்ள மனிதர்களின் அரசாங்கம் பல வகைகள் (பெயர்கள்) உண்டு. எடுத்துக்காட்டாக:
மன்னராட்சி,
மக்களாட்சி, மற்றும் ஜனாதிபதி
ஆட்சி. இப்படி அது
போய்க்கொண்டே இருக்கும். அதாவது பொது மக்கள் என்பதை புரிந்து கொள்ளாத வரையில் இதேபோல் நம்மால் 1000 அரசாங்கத்தை கொண்டு வர முடியும் இந்த உலகத்தில்.
தொடரும்
அரசங்கதின் வரலாறு
முதன் முதலில் மனிதர்கள் வாழ்ந்த இடம் லெமூரியா கண்டம் என வரலாற்று
ஆசிரியர்கள் கூறுகிறார்கள். மேலும் இங்கிருந்துதான் உலக முழுவதும் பரவினார்கள் என்றும்
அவர்கள் கூறுகிறார்கள். அக்காலகட்டத்தின் முதல் இந்நாள் வரை அரசாங்கம் என்பது படிப்படியாக
வளர்ந்து வந்துள்ளது. அதாவது முதலில்
தனி தனியாக வாழ்ந்த மனிதன் பிறகு ஜோடியாக, குடும்பமாக, குழுவாக, மற்றும் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ ஆரம்பித்தான். எனவே மனிதன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த போது ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு
ஏற்படுத்தப்பட்டதுதான் அரசாங்கம். இங்கே அரசாங்கம் என்பது தனியாக ஒன்று இல்லை அதாவது பொதுவான மனிதர்களில் அவரும் ஒருவர். அப்போது அரசாங்கம் என்ற பெயர் வேறு எந்த ரூபத்திலும் இல்லை. இக்காலகட்டத்தில் இருந்த அரசாங்கம் மிகவும் சுத்தமான அரசாங்கம் ஏனென்றால் அதற்க்கு பெயர் பொது மக்கள் (அரசாங்கம்). தற்போது இந்த
உலகத்தில் உள்ள எல்லா வகையான அரசாங்கமும் இந்த அரசாங்கத்திடமிருந்துதான்
தொடங்குக்குகிறது. பல காலத்திற்கு பிறகு மன்னர்கள்
வந்தார்கள் பொது மக்களுக்காக ஆனால் பொது மக்களாக அல்ல. இதனை தொடர்ந்து
அரசாங்கம் வந்தது மக்களுக்காக ஆனால் இது மன்னர்கள் போல் அல்லாமல் பொது மக்களை போல்
வந்தது.
எனக்கு இதுவரை
தெரிந்த ஆட்சியாளர்களில் கர்ம வீரர் காமராஜர் மட்டுமே பொது மக்கள் ஆட்சியை
நடத்தினார். எம் ஜி ராமசந்திரன் (எம்ஜிஆர்) (MGR) பொதுமக்களுக்காகவே ஆட்சியை நடத்தினார். மேலும் இந்த
உலகத்தில் பிடல் காஸ்ட்ரோ, விளாடிமிர் லெனின்
மற்றும் யாசர் அராபத் ஆகியோர் இருக்கலாம்.
பொதுவாக இந்த உலகத்தில் பலவகையான அரசாங்கம் இருக்கிறது
அவைகளில் முக்கியமானது 1. ஜனநாயகம் [நேரடி மற்றும் மறைமுக ஜனநாயகம், (சுவிட்சர்லாந்து,இந்திய)], 2. குடியரசு தலைவர் ஆட்சி (ஜனநாயகம்) (அமெரிக்கா), 3. முடியாட்சி (இங்கிலாந்து), 4.
கம்யூனிசம் (ரஷ்சிய) 5. ராணுவ சர்வாதிகாரம் (மியான்மர் மற்றும் பாக்கிஸ்தான்), 6. சர்வாதிகாரம்
(இடியாமின்-உகாண்டா,
பெர்டினாட் மார்கோஸ்-பிலிபைனான்ஸ், அடோப் ஹிட்லர்-ஜெர்மனி), 7. எதோச்சதிகாரம் (மன்னர் அல்லது தனி நபர்), ஆகியவையாகும். இந்த அரசாங்கம் அனைத்தும் பொது மக்களுக்காக, பொது மக்களை போல் உள்ள அரசாங்கம். அது மன்னர் ஆட்சியை இருந்த என்ன அல்லது
மக்கள் ஆட்சியா இருந்த என்ன அல்லது சர்வாதிகார ஆட்சியை இருந்த என்ன. எல்லாமே பொது
மக்கள் ஆட்சிதான். அனைவரும் பொது மக்கள்தான். எனவே அனைவரும் தவறுகளை செய்வார்கள்
இந்த உலக வாழ்க்கையில்.
பொது
மக்களிடமிருந்து இந்த ஆட்சியாளர்களை வேறுபடுத்தி காட்டுவது இவர்களுடைய ஒரு சில
செயல்கள்தான். இந்த செயல்கள்தான் ஆட்சியாளர்களிடம் உள்ள மிக முக்கியமான ஒன்று. இவர்களுடைய செயல்களைத்தான் சட்டம் வரையறை செய்கிறது. சட்டத்தில்
உள்ளபடிதான் இவர்கள் செயல்களை செய்யமுடியும். இவர்கள் சட்டப்படி செயல்களை செய்தாலும் இவர்கள் அனைவரும் பொது மக்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. நான் பொது மக்கள் அல்ல, நான் ஒரு மன்னன், நான் ஒரு ஜனாதிபதி, நான் ஒரு பிரதமர், நான் ஒரு முதலமைச்சர், என்று எவர் ஒருவர் கூறுகிறாரே (நினைக்கிறாரோ) அவர் அறியாமையில்
இருக்கிறார் என்று அர்த்தம். அறியாமையில் உள்ளவர்களால் கண்டிப்பாக தப்புகள் நடக்கும். இங்கே அறியாமை என்பது எதை குறிக்கிறது? இதை பிறகு விரிவாக பார்க்கலாம்.
நான் ஒரு மன்னன், ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என்று கூறும் (நினைக்கும்) இவர்கள், அறியாமையில் இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல. இது மிகவும் அபாயகரமானது. இந்த அபாயம் என்பது எப்படி இருக்கும் என்று
நினைக்கிறீர்கள்? இவைகளையும் பிறகு விரிவாக பார்க்கலாம். நாம் அனைவரும் பொது மக்கள் என்று நினைப்பவர்கள் இவர்களை
நன்கு கண்காணிக்க வேண்டும். இங்கே இவர்கள் அறியாமையால் செய்யும் தப்புகளை ஒரு
சிலவற்றை பார்ப்போம்.
ஒரு மன்னன், நான் இந்நாட்டின்
மன்னன் என்று நினைக்கும் போது, அவர் மற்றவர்களை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம் ஆனால் அவர் மக்களை பொது
மக்கள் என்று பிரித்துவிடுவார். அப்போது இந்நாட்டினுடைய சொத்துக்கள் அனைத்தும் பொதுமக்கள் சொத்து, நான் இந்நாட்டின் மன்னன் எனவே இந்த சொத்துக்களை நமது
சொத்தாக மாற்ற வேண்டும் என்று அவர் சுலபமாக மாற்றி விடுவார். இதேபோல் சட்டத்தையும் அவருக்கு
தகுந்தாப்போல் மாற்றி விடுவார். பிறகு போது மக்களுக்கென்று (மக்களை
கட்டுப்படுத்த) ஒரு சட்டத்தையும் கொண்டுவந்துவிடுவார். தற்போது உள்ள சட்டங்கள் அதிகமாக இருப்பது பொது மக்களை கட்டுபடுத்தும்
சட்டங்கள்தான். இவைகள் எல்லாம் மன்னன் அறியாமை செய்யும் தப்புக்கள் என்று நாம் எப்படி
நம்புவது? [மன்னன் அறிவாளியாக
(மன்னனாக) இருந்தால் தப்புக்கள் ஏன் நடக்கப்போகிறது?] இந்த மன்னர்களுடைய அறியாமை என்ன என்பதைத்தான் பிறகு பார்க்க போகிறோம். சரி இதற்க்கு ஏதாவது தீர்வு இருக்க என்றல் இருக்கு மன்னன் இறந்துவிட்ட
பிறகு அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பொது சொத்துக்களாக மாற்றப்பட வேண்டும். ஏன்னென்றால் மன்னரின் அறியாமையால் கைப்பற்றப்பட்ட பொது சொத்துக்கள் தானே
அவைகள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு அதாவது தனியார் சொத்துக்கள். ஏன்னென்றால்
தனியார் சொத்துக்கும் மன்னரின் சொத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. இதையும் பிறகு விலாவரியாக பார்க்கலாம்.
தொடரும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.