தமிழில் படிக்க கீழே வரவும்
Doctor S Anitha
I am a D Adhikesvan. I have a few
doubts about the selection of this NEET competition exam because I am a Tamil. Mainly
my purpose, goal, everything is that this poverty, unemployment, and extremism
(terrorism) must be taken out of this world. So if we want to take this three
out of this world, my desire is that everything should be right because my
opinion is that everything in this world can be right but that is true of this
world.
If
someone wants to help someone, the help he asks depends. Help is knowledge
(advice), guidance, labor and material. There is no restriction to give to
others. Here are four categories: a helper-doer, a helper-asker, a helper-asker-goods
and an owner of the property.
For instance, a Gujarati student asks
the Prime Minister of India to help me study medicine in Tamil Nadu. This is
not a problem for him. But it's a bit harder to do help that many students from
many states are asking. Because the Prime Minister of eminent India should look
equally at all students in India. He is the eminent Prime Minister of India.
So it's a difficult thing for a special Prime
Minister. That will be right what will he do in this situation? What should he
do?
Now the eminent Prime Minister of India
has to get an approval from the Honorable Chief Minister of Tamil Nadu to study
medicine in Tamil Nadu. What is that endorsement is well known to the eminent Prime
Minister of India and the Honorable Chief Minister of Tamil Nadu. No matter how
many students are and the problem is gone. If there create a problem with the
Tamil people in this situation, it is the duty of the Honorable Chief Minister
of Tamil Nadu to deal with it. But everything in this NEET exam is inverted and
a different way. As a result, a student is dead in Tamil Nadu.
What should Tamil students do to study medicine
in Tamil Nadu? In which language should they study? Which state should they
study in? In what school do they need to study? Why should they write a NEET
exam? Who will give the command to write a NEET exam? Why does not NEET exam prepare
in Tamil? Let's go through these questions.
-
Growing
International
politics after the NEET exam The Delhi professor, who clearly explains, is
Miyaz Ahmed. In Tamil, Anantha Vikatan, Publised on 23.05.2017
"Why
are you being an academic and why are you opposed to the selection of choice?
... Do not you want us to improve our education sector?"
"I
am an academic, professor, because I am opposed to the NEET exam. The quality
of education will improve by the selection process. In fact, the selection of
the NEET is against the Indian Constitution. "
''
How are you saying ...? ''
"Every
passage of the Constitution prescribes social justice and equality. But this
choice is contrary to that. India is not a single nation. It is a collection of
states of various nationalities. A single choice to examine the potential of
students of various nationalities is pure disorientation. The North East
student and all the chances of the Delhi student who will not compete in the
competition will also compete. Is not the only choice for both of them to work
with people? Not only that, the Indian governments are doing the job of
fulfilling a new academic policy in the House, but each of them is fulfilling
its own. This is a part of that.
"Well
... if you still have the same old policy, do you want to go on a new academic
policy?"
''
Surely have to change. It should be for the benefit of our students, not for
the benefit of the companies. But now big companies are designing our policy.
Its representatives include the World Bank, the International Monetary Fund and
the World Trade Organization. With the benefit of the students, the interests
of the employers are of primary importance in this policy. World capital has
launched a war on the Indian education department. That capital will not be
loyal to any nation, people or natural resources. It is only the profit of the
profit, the child of that capital is the 'choice'. "
''
I do not understand. What is the World Trade Organization and what is the
global capital? "
"The
Indian government has made some promises to the World Trade Organization. One
of these is the privatization of the entire Indian health department. Allowing
foreign funding without a settlement. If this is to be fulfilled, the Indian
public health department should be distorted. This is the choice to disturb it.
"
"Can
you explain a little more ...?"
Students
in the field of medical education should work for some time in the village.
There is a reservation. But there is no chance of selection in the NEET. Thus,
the village and primary health centers will be destroyed. There will be private
hospitals in that place. You need to understand this background not only in
terms of the selection option. If you see this nut selection in the context of
social justice rather than international politics, you know the politics of the
people who are deprived of the opportunity to take care not to come in the
medical field. "
'Are
eligible to come in the field of medicine?'
What
is the status quo? If a student from subordinate and tribal communities is
studying hard and waiting for a good medical course, you have a choice of a
nut. Just think of it. Can he pay for the specialty classes? But you say, 'run
for one run,' a tribal student who cannot afford to pay special classes and
cannot afford money. Think from the heart, not from the brain. Has all the
districts in your state got all the facilities? When I was talking here ...
'Villupuram and Ramanathapuram districts are behind.' So how can children in those districts
compete with the children of the Chennai district? When there is so much
trouble in a state, will a single country have a different nationality,
religion, caste and discrimination?
"But
Tamil Nadu is the only one that strongly opposes NEET's selection?"
''
Yes. You have to be proud of it. This is the Ayodhidas Pandit and the Periyar
you have the wisdom. It is clear that you are social justice than other states.
That's why, if you have any small friction, you are uprooting ... fighting. In
fact, the struggles of the Tamil people are for other ethnic groups in India.
When other states are unable to hold Jallikattu, you have successfully
conducted a struggle and conducted a jalikotai. Now you have to hold the jalcut
against the NEET exam. "
டாக்டர் அனிதா
த. ஆதிகேசவன் என்றவனாகிய நான், தமிழன் என்பதால் எனக்கும் இந்த நீட் போட்டி தேர்வு பற்றி
ஒரு சில சந்தேகங்கள் இருக்கு. முக்கியமா என்னுடைய நோக்கம், இலக்கு, எல்லாமே வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், மற்றும் தீவிரவாதத்தை இந்த உலகத்திலிருந்து வேரோடு எடுக்க வேண்டும் என்பததுதான். எனவே நாம் இந்த உலகத்திலிருந்து இந்த மூன்றையும் வேரோடு எடுக்க வேண்டுமென்றால்
எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் ஏன்னென்றால் இந்த உலகத்தில் உள்ள எல்லாமே சரியாக இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து ஆனால் இந்த உலகத்தை
பொறுத்தவரை உண்மையே அதுதான்.
ஒருவர்
இன்னொருத்தவருக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் அவர் கேட்க்கும் உதவி பொறுத்து
இருக்கு. உதவி என்பதுஅறிவு (புத்திமதி), வழி காட்டுதல், உழைப்பு, மற்றும் பொருள் ஆகியவை ஆகும். நம்முடையதை மற்றவருக்கு கொடுக்க எந்த தடையும் இல்லை. இங்கே உதவி கேட்பவர், உதவி செய்பவர், உதவி கேட்கும் பொருள் மற்றும் அப்பொருளின் உரிமையாளர் என
நான்கு வகைகளாக இருக்கின்றன.
உதாரணமாக, ஒரு குஜராத்
மாணவர் மாண்புமிகு இந்திய பிரதம மந்திரியிடம் தமிழ் நாட்டில் மருத்துவம் படிக்கச்
எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார். இது ஒரு பிரச்சினையே கிடையாது
அவருக்கு. ஆனால் அதுவே பல மாநிலத்திலிருந்து பல மாணவர்கள் கேட்கிறார்கள் என்றல்
கொஞ்சம் சிரமமான விஷயம்தான் அவருக்கு. ஏனென்றால் ஒரு சிறப்புமிக்க இந்தியாவின் - பிரதம மந்திரி
இந்தியாவில் உள்ள அனைத்து மாணவ செல்வங்களையும் சமமாக பார்க்க வேண்டும். அவர்தான்
இந்தியாவின் சிறப்புமிக்க பிரதம மந்திரி ஆவர். எனவே இந்தியாவின் ஒரு சிறப்புமிக்க
பிரதம மந்திரிக்கு சற்று சிரமமான விஷயம்தான் அது. இந்த சூழ்நிலையில்
அவர் என்ன செய்தல் அது சரியாக இருக்கும்? என்ன செய்ய
வேண்டும்?
இப்பொழுது தமிழ் நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு இந்தியாவின் சிறப்புமிக்க
பிரதம மந்திரி ஒரு ஒப்புதல் பெறவேண்டும் மாண்புமிகு தமிழக முதல்வரிடம். அந்த ஒப்புதல் என்ன என்பது இந்தியாவின் சிறப்புமிக்க பிரதம மந்திரிக்கும்
மற்றும் தமிழக மாண்புமிகு முதல்வருக்கும் நன்றாகவே தெரியும். எத்தனை மாணவ செல்வங்களாக இருந்தாலும் பரவாயில்லை பிரச்சனை ஒழிந்தது. இந்த சூழ்
நிலையில் தமிழக மக்களிடம் பிரச்சனை தோன்றினால் அதை சமாளிப்பது தமிழக மாண்புமிகு
முதவருடைய கடமையாகும். ஆனால் இந்த நீட் தேர்வில் எல்லாமே வேறுமாதிரிய தலைகீழா இருக்கு. அதன்காரணத்தினால் தமிழகத்தின் ஒரு
மாணவி இறந்துபோனதுதான் மிச்சம்.
-
வளரும்
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக
விளக்கும் டெல்லி பேராசிரியர் - மு.நியாஸ் அகமது.
அனந்த விகடன் 23.05.2017
''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம்
கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''
''நான் கல்வியாளர்,
பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட்
தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''
''எப்படிச் சொல்கிறீர்கள்...?''
''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின்
மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி
எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும்
ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல,
புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள்
செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''
'சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு
இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''
''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக்
கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம்,
உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.
மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான்
இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக்
கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம்
தேசத்துக்கு,
மக்களுக்கு, இயற்கை
வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான்
விசுவாசமாக இருக்கும்,
அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்'
தேர்வு.''
''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''
''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில்
தங்குத்தடை இல்லாமல்,
அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த
நீட் தேர்வு.''
''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''
இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம்
கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார்
மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப்
பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல்
அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''
'தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''
''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
அவனால்,
நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர
முடியுமா...?
ஆனால், பணம் கொடுத்து சிறப்பு
வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர
முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில்
ஓடுங்கள்'
என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக்
கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம்,
ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால்,
அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை
மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே
இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய
இனங்கள்,
மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''
''ஆனால்,
தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''
''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர்,
பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட
உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்...
போராடுகிறீர்கள். உண்மையில்,
தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற
இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல்
இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை
நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான
ஜல்லிக்கட்டு.''
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.